விருதுநகர்: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளர்ப்பு தந்தையை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி 6-ம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை இறந்த நிலையில், கூலித் தொழிலாளியான 32 வயது தாய், அழகர்சாமி (44) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமிக்கு, அழகர்சாமி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.