சென்னை போலீஸார் பிடியில் இருந்து தப்பிய ரவுடி அண்டா சீனு கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது போலீஸாரின் பிடியிலிருந்து தப்பிய ரவுடி அண்டா சீனு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பி.எம் தர்கா பகுதியைச் சேர்ந்த ரவுடி அண்டா சீனு. இவர் மீது 10 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலை முயற்சி வழக்கு ஒன்றில் நேற்று முன்தினம் கைது செய்த ராயப்பேட்டை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அப்போது போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி தப்பிவிட்டார்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, வழக்கமாக எங்கு தங்குவார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, ஒரு வழியாக இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE