கரூர்: கரூர் தோரணக்கல்பட்டியை அடுத்த சாலை புதூரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(31). ஓட்டுநரான இவர், 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பிப்.7-ம் தேதி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஓட்டுநர் மாரியப்பனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரியப்பன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரியப்பனை கைது செய்து சிகிச்சைக்கு பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மாரியப்பனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் மீ.தங்கவேல் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
» ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயது குழந்தை மரணம்: கன்னியாகுமரி சோகம்
» மயிலாடுதுறை அருகே அதிர்ச்சி: பணியில் இருந்த செவிலியர் மயங்கி விழுந்து திடீர் மரணம்