தென்காசி: சிவகிரியைச் சேர்ந்தவர் அன்ன லெட்சுமி (22). இவரது பெற்றோர் செல்வராஜ் (50), ரதி தேவி மற்றும் சகோதரர்கள் இதே ஊரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் தினமும் மது அருந்திவிட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை இவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
ஆத்திரம் அடைந்த செல்வராஜ், அன்ன லெட்சுமியின் வீட்டுக்கு தீ வைத்தார். இதில், ஆவணங்கள், உடைமைகள் எரிந்து சேதமடைந்தன. அன்ன லெட்சுமி அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, செல்வராஜை கைது செய்தனர்.