நாகையில் அதிர்ச்சி: கீழையூர் அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

By KU BUREAU

நாகை: கீழையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன், தலைமைக் காவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரதாபராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் செல்லும் சாலையில் கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரதீப் (30), பிரதாபராமபுரம் செருதூர் பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் (39) ஆகியோர் என்பதும், 2 பேரிடம் இருந்த பைகளில் மொத்தம் 24.450 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE