தேன்கனிக்கோட்டை அருகே மான் இறைச்சி விற்பனை செய்ய முயற்சி: 4 பேர் கைது

By KU BUREAU

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து, தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட கெம்பகரையிலிருந்து கேரட்டி செல்லும் சாலையில் உதவி வன உயிரின பாதுகாவலர் சைதன்யா மாதவ் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் மான் இறைச்சி இருப்பது தெரிந்தது.

விசாரணையில், வனப்பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரிந்தது. தொடர்ந்து, இறைச்சி மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த வனத்துறையினர் கேரட்டியைச் சேர்ந்த ஆண்டியப்பன் (51), கண்ணையன் (37), பழனியப்பன் (55), சந்தனப் பள்ளியைச் சேர்ந்த அரிநாதன் (39) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE