தடை செய்யப்பட்ட சங்குகள் பறிமுதல்: திருச்செந்தூரில் ஒருவர் கைது

By KU BUREAU

தூத்துக்குடி; திருச்செந்தூர் கடற்கரையில் தடை செய்யப்பட்ட சங்குகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடற்கரையில் தடை செய்யப்பட்ட சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் கவின் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆலந்தலை சுனாமி காலனியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர், தடை செய்யப்பட்ட சங்குகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து, 2 மாட்டுத்தலை சங்குகள், 18 குதிரை மொழி சங்குகள், 1 நட்டுவாக்காளி சங்கு ஆகிய 21 சங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்தோணிராஜ் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE