குமரியில் மனைவியை கொலை செய்த வழக்கு: 29 ஆண்டுகளுக்கு பின் கணவர் கைது

By KU BUREAU

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ்(59). இவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த அவரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் 10 மாதங்களில் வெளியே வந்த தாஸ் திடீரென தலைமறைவானார். அவரை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தாஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இருப்பதாக மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று தாஸை கைது செய்தனர். சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE