ஸ்ரீவைகுண்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை

By KU BUREAU

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (36). கடந்த 2022-ம் ஆண்டு, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் முருகன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட் கால சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் காவல் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE