வத்தலகுண்டு அருகே பரபரப்பு: கட்டிட தொழிலாளிகள் இருவர் படுகொலை; போலீஸார் விசாரணை

By KU BUREAU

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே கட்டிடத் தொழிலாளிகள் இருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை (50). சோழவந்தானை சேர்ந்தவர் மனோகரன் (52). இருவரும் கொன்னம்பட்டியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று மாலை வேலை முடிந்து தாங்கள் தங்கியுள்ள கொன்னம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.

வெங்கடாஸ்திரிகோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது வழிமறித்தவர், இருவரையும் கட்டையால் தாக்கிக் கொலை செய்தார். இரட்டைக் கொலை குறித்து வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE