காதல் கணவர் திடீர் மாயம்; கர்ப்பிணி மனைவி புகார் - மதுரையில் அதிர்ச்சி!

By KU BUREAU

மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பழனி மாணிக்கம். இவரது மனைவி மதுமதி (24). ஐந்து மாதங்களுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து மதுரை குலமங்கலம் பகுதியில் குடியேறினர். 4 மாத கர்ப்பிணியாக உள்ள மதுமதி, மதுரை ரிங்ரோட்டிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிகிறார்.

கடந்த 15ம் தேதி காலை கணவன், மனைவி இருவரும் குலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு மதுமதிக்கு மருத்துவப் பரிசோதனை முடித்துவிட்டு வெளியே சென்ற பழனிமாணிக்கம் மாலை வரை வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என, தெரியவில்லை. இது குறித்து மதுமதி செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பழனி மாணிக்கத்தை தேடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE