சென்னையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை: ஒடிசா இளைஞரை கைது செய்தது போலீஸ்

By KU BUREAU

சென்னை: பெரியமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்த வெளி மாநில நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பெருநகர காவல், G-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (16.02.2025) சென்ட்ரல் ரயில் நிலையம், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த ஒடிசாவை சேர்ந்த ராசா நந்தா மகன் கார்த்திக் பிரசாத் மாலிக் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருநது 30 கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி கார்த்திக் பிரசாத் மாலிக் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE