கடலூர் சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் பழகி தவறாக பயன்படுத்திய இளைஞர்: குண்டர் சட்டத்தில் கைது

By KU BUREAU

கடலூர்: முதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அன்பு என்கிற அன்புகுமார் (30) என்பவர் சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று தவறாக பயன்படுத்திகொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அன்பு என்கிற அன்புகுமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அன்பு என்கிற அன்புகுமார் மீது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்களிடம் பணம் மற்றும் நகைகள் பறித்தது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையம், சென்னை பெரவளுர் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார், குற்றவாளி அன்பு என்கிற அன்புகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தவிட்டார். இதையடுத்து போலீஸார் கடலூர் மத்திய சிறையில் உள்ள அன்பு என்கிற அன்புகுமாரிடம் நேற்று முன்தினம் உத்தரவு நகலை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE