8ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: கிருஷ்ணகிரியில் பெற்றோர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு!

By KU BUREAU

கிருஷ்ணகிரி: மாணவிக்குத் திருமணம் செய்த வைத்த பெற்றோர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு அவரது பெற்றோர் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கழுத்தில் தாலிக்கயிறு இருந்ததைப் பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மாணவியிடம் விசாரித்தபோது, அவருக்குத் திருமணம் நடந்த விவரம் தெரியவந்தது.

தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸார், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE