தேனி: கடமலைக்குண்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப் படையில், கடமலைக்குண்டு போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள கரட்டுப் பகுதியில் 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாலூத்து பகுதியைச் சேர்ந்த குமரேசன் (50) என்பவரை கைது செய்த போலீஸார், கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். ஆய்வாளர் கண்மணி விசாரிக்கிறார்.