திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்தூரி என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமையில் சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பெத்ராஜிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
» மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் - திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
» மிளகாய் இடித்து அபிஷேகம் செய்து நூதன வழிபாடு: புதுச்சேரியில் தைப்பூசம் கோலாகலம்!
அதில், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பெயரை பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தில் பிப்.18-ல் கந்தூரி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.