சின்னமனூர் அருகே பயங்கரம்: ஜாமீனில் வந்தவர் வெட்டிப் படுகொலை

By KU BUREAU

தேனி: சின்னமனூர் அருகே உள்ள அப்பிப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் வேல்மணி( 54 ). அதே தெருவில் இட்லி கடை வைத்து நடத்தி வரும் ராணி என்பவருக்கும், வேல்மணிக்கும் கடந்த மாதம் சாக்கடை குறித்து பிரச்சினை ஏற்பட்டது.

இதில் ராணியைத் தாக்கியதாக ஓடைப்பட்டி போலீஸார் வேல்மணியை கைது செய்தனர். இந்நிலையில் இவர் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று வீட்டுக்கு அருகே நின்றிருந்தபோது ராணியின் உறவினர் சிவச்சந்திரன்(29) இவரிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினார்.

இதில் தலை, கழுத்து ஆகிய இடங்களில் காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். ஓடைப்பட்டி போலீஸார் சிவச்சந்திரனை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE