தாம்பரம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி: இளைஞர் தற்கொலை

By பெ.ஜேம்ஸ் குமார்

படப்பை: தாம்பரம் அருகே, ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.15 லட்சத்தை இழந்த படப்பையை சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம் அருகே பெரியார் நகர், படப்பை தாம்பரம் அருகே படப்பை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகநாதன் (35). திருவொற்றியூரைச் சேர்ந்த அருள்மொழி. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகிறது. இவர் ஒரகடம் நிசான் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோகநாதன் பண தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் வர்த்தகம் செய்து பணத்தை இழந்துள்ளார்.

இதனிடையே கடனை திருப்பி செலுத்த கூறி லோகநாதனுக்கு ஆன்லைன் செயலி மூலம் தொந்தரவு கொடுத்ததாக கூறப் படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லோகநாதன் நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு ( 05.2.2025) யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் அருகே இருந்த ஜன்னலில் துப்பட்டாவில் லோகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், இறந்து போன லோகநாதன் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.15 லட்சம் பெற்றதாகவும், அந்த பணத்தை ஆன்லைன் வர்த்தகம் மூலம் இழந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் இதில் ( 04.2.2025) இரவு லோகநாதன் மனைவி அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழந்து மன உளைச்சலில் இருந்த லோகநாதனுக்கு, தன் மனைவி பிரிந்து சென்றதில் மேலும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் செயலில் பணத்தை செலுத்த தொந்தரவு செய்ததால் அதிக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE