வேலைக்காக இணைய குறுந்தகவலை நம்பி ரூ. 5 லட்சம் இழந்த புதுச்சேரி இளைஞர் தற்கொலை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வேலை இருப்பதாக இணையத்தில் வந்த குறுந்தகவல் அடிப்படையில் மர்ம நபர்களிடம் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த புதுச்சேரி பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பம்வ புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பம் இடையஞ்சாவடியைச் சேர்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் (25). தொழில்நுட்பப் பட்டதாரி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது கைபேசியில் வந்த குறுந்தகவலில் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

அதை நம்பிய சபரிவாசன், குறிப்பிட்ட செயலியில் தனது விவரங்களைப் பூர்த்தி செய்தததுடன், கடன் வாங்கி ரூ. 5 லட்சத்தை செயலாக்கக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் செலுத்திய நிலையில், அவருக்கான வேலை விஷயமாக எந்தத் தகவலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தநிலையில், கடன் கொடுத்தவர்களும் அதைக்
கேட்டு நெருக்கடி தந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த லாசுப்பேட்டை போலீஸார் சபரிவாசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE