சென்னை | ரூ.75 ஆயிரம் பணத்தை திருடிய சமையல் மாஸ்டர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னை ஓட்டேரி பட்டாளம் மங்கபதி தெரு​வில் வசித்து வரும் ஆனந்த குமார் (36). அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு ரூ.75 ஆயிரம் பணத்தை கல்லா பெட்​டி​யில் வைத்து​விட்டு, வழக்கம் போல ஹோட்டலை மூடி​விட்டு சென்​றார். மறுநாள் காலை​, ஹோட்டலை திறந்து கல்லாப் பெட்​டியை பார்த்த​போது ரூ.75 ஆயிரம் மாயமானது தெரிந்​தது.

இதுகுறித்து ஆனந்த குமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரனையில் அதே ஹோட்​டலில் சமீபத்தில் சமையல் மாஸ்​டராக வேலைக்கு சேர்ந்த வியாசர்​பாடியை சேர்ந்த சதிஷ்கு​மார்​(34) பணத்தை திருடியது தெரிய​வந்​தது. போலீ​ஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE