திருச்சி: திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சேக்மைதீன் மகன் முகமது ஜபருல்லா (18). இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு ஃபிட்டர் படித்து வருகிறார்.
இவருக்கும் அதே ஐடிஐயில் சி.என்.சி முதலாம் ஆண்டு படிக்கும் திருச்சி தாயனூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் நிதிஷ்குமார் (18) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதத்திற்கு முன்பு தகறாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் முகமது ஜபருல்லாவிற்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முகமது ஜபருல்லா வகுப்பறையில் டெஸ்கில் சாய்ந்து தூங்கிய போது நிதிஷ் குமார் முகமது ஜபருல்லா முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
» மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது!
இதில் காயமடைந்த முகமது ஜபருல்லாவை சக மாணவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.