17 வயது சிறுவனை கடத்திய பெண்: பெரியபாளையம் அருகே போக்சோவில் கைது

By இரா.நாகராஜன்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 17 வயது சிறுவனை கடத்திய பெண், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பள்ளி படிப்பை பாதியில் விட்டு, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பூக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவர் வினோதினி (28). திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான இவர், 17 வயது சிறுவனிடம் தவறான நட்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவ்விசாரணையில், சிறுவனை வினோதினி கடத்தி சென்று, கல்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, கல்பட்டு பகுதிக்கு விரைந்த போலீஸார் சிறுவனை மீட்டதோடு, போக்சோ சட்டத்தின் கீழ் வினோதினியை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE