சென்னை: அண்ணாநகர் பகுதியில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் ஜனவரி 21ம் தேதி (நேற்று) அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுப்பதுபோல் நகைக்கடையில் திருடிய பெண் கைது
» மங்களூர் கூட்டுறவு வங்கியில் திருடிய வழக்கில் நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது