நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுப்பதுபோல் நகைக்கடையில் திருடிய பெண் கைது

By KU BUREAU

சென்னை: சென்னை யானைக​வுனி, என்.எஸ்​.சி. போஸ் சாலை​யில் நரேஷ்கு​மார் மேத்​தா(54) என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 17-ம் தேதி இரவு தங்க நகைகளை சரிபார்த்த​போது, சில தங்க நெக்​லஸ்கள் திருடுபோயிருந்தது தெரிய​வந்​தது. இதுகுறித்து யானைக​வுனி காவல் நிலை​யத்​தில் மேத்தா புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து அந்த நகைக்​கடை​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்​தனர். அதில் கைக்​குழந்​தை​யுடன் ஒரு பெண் தங்க நெக்​லஸ்களை திருடியது பதிவாகி​யிருந்​தது. தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அந்தப் பெண், தண்டை​யார்​பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த முத்​துலட்​சுமி(40) என்பது தெரிய வந்தது. அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அந்தப் பெண், கடந்த மாதம் 24-ம் தேதி மேத்​தா​வின் நகைக்​கடைக்​குச் சென்று, தங்க நெக்​லஸ் செய்ய ஆர்டர் கொடுத்து விட்டு சென்​றுள்​ளார். பின்னர், கடந்த 17-ம் தேதி, ஆர்டர் கொடுத்த நகையை வாங்கச் சென்​றுள்​ளார். பின்னர், அந்த நெக்​லஸில் சில குறைகள் உள்ள​தாகக்கூறி அதை சரி செய்ய சொல்​லி​விட்டு சென்​றுள்​ளார். அப்போது சில தங்க நெக்​லஸ்களை திருடிச் சென்​றுள்ளார். அவரிட​மிருந்து 83.55 கிராம் எடை​யுள்ள தங்க நெக்​லஸ்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE