கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனரக சரக்கு லாரியில் சிக்கி தந்தை - மகன் உயிரிழந்த பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் இருந்து மைசூர் கேரள உட்பட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான சரக்கு லாரிகள் செல்கின்றன. இந்நிலையில், கூடலூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு சரக்கு லாரி ஒன்று செல்லும்பொழுது, கூடலூர் மனதுர்கா பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (32) மற்றும் அவரது மகன் விகில் வர்ஷன் (4) இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கனரக லாரியும் சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறிய தந்தை மகன் கீழே விழுந்தனர்.
அப்போது சரக்கு லாரி அவர்கள் மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் சிக்கி உயிரிழந்த தந்தை மகனின் உடல்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
நாள்தோறுளும்ள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சரக்கு லாரியில் சிக்கி தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினர் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நெடுஞ்சாலை துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இரண்டு உயிர்கள் பலியானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
» ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டினரை அனுமதிக்கக்கூடாது: விக்கிரமராஜா உறுதி
» கன்னியாகுமரியில் மேகமூட்டத்தால் தென்படாத சூரிய உதயம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்