பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது!

By KU BUREAU

கரூர்: கரூர் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கரூர் வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி அவரது தாயிடம் அழுது கொண்டே கூறிய நிலையில், மாணவியின் தாயார் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் இது குறித்து புகாரளித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE