கரூர்: சேவல் சண்டை நடத்த அனுமதி என சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அரவக்குறிச்சி காவல் நிலையம் எச்சரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசில் நடைபெறும் சேவற்கட்டு மிகவும் பிரச்சித்தி பெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதிகளை மீறி சேவல் காலில் கத்தி கட்டப்படுவதால் சிலர் உயிரிழந்ததாலும், பலர் காயமடைந்ததாலும் சேவற்கட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொங்கல பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் அரவக்கு றிச்சி மற்றும் பூலாம்வலசு பகுதியில் இன்று (ஜன. 11) அரவக்குறிச்சி போலீஸார் சார்பில் காவல் துறை அறிவிப்பு என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் சேவல் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி எவரேனும், சேவல் சண்டை நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
» மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு கூறவேயில்லை: அமைச்சர் சிவசங்கர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற சமூக வலைதளங்கில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும். அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் எங்காவது சேவல் சண்டை நடத்தினால், காவல் ஆய்வாளர் 94981 72630, காவல் உதவி ஆய்வாளர் 94981 61677, காவல் நிலையம் 94981 00784 ஆகிய தொலைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.