கீழ்ப்பாக்கத்தில் மாநகர பேருந்து மேற்கூரையில் ஏறி ரகளை: 3 பேர் கைது!

By KU BUREAU

சென்னை: கீழ்பாக்கம் பகுதியில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திய 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 09.01.2025 அன்று காலை 11.35 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, டெய்லர்ஸ் ரோடு சந்திப்பில் நடந்து வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், அங்கு நின்று கொண்டிருந்த தடம் எண்.15 B பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயன்றுள்ளார். உடனே அங்கு பணியிலிருந்த போலீசார், மாணவர்களை தடுத்து கீழே இறக்கிய பின்னர், மாணவர்கள் சத்தம் போட்டு கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி கல்லூரியை நோக்கி நடந்து சென்றுள்ளனர். இது குறித்து G-3 கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட செங்குன்றம் ராஜாவின் மகன் ஜீவா(20), கன்னிகைபேர் சீனிவாசன் மகன் பவித்ரன்(20), திருகண்டலம் குடியரசு மகன் புவியரசு(19) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜீவா மீது 4 வழக்குகளும், புவியரசு மீது 1 வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்ப்பட்ட 3 நபர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE