மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 4.7 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல்

By இ.ஜெகநாதன்

மானாமதுரை: மானாமதுரையில் பல கோடி ரூபாயிலான 4.70 கிலோ திமிங்கலம் எச்சத்தை (அம்பர் கிரிஸ்) வனத்துறைத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

திமிங்கல எச்சம் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. மேலும் அதை வைத்திருக்க அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் ஜன.2-ம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் திமிங்கலம் எச்சத்தை கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு சோதனையிட்டபோது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த ராஜாராம் (53) என்பரிடம் ஈரப்பதத்துடன் 4.695 கிலோ திமிங்கல எச்சம் இருந்தது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், விசாரணையில் அவர் தேனியில் இருந்து கொண்டு வந்ததாகவும், இதை மற்றொருவருக்கு கொடுக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், ராஜாராமை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE