திருப்பூர்: திருப்பூரில் ரூ 12 லட்சம் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் கடத்தியவர் இன்று (ஜன. 10) கைது செய்யப்பட்டார்..
திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் திமிங்கலத்தின் எச்சம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி, திருப்பூர் வனச்சரக அலுவலர் தலைமையில், திருப்பூர் வனச்சரக பணியாளர்களுடன் கணபதிபாளையம் ராஜேந்திரன் என்பவரது வெல்டிங் பட்டறையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு திமிங்கலத்தின் எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் திமிங்கலத்தின் எச்சத்தை வைத்திருந்த ராஜேந்திரனை (52) வனத்துறையினர் இன்று கைது செய்தனர். இதன் மதிப்பு ரு.12 லட்சம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனை சிவகாசியில் ஒருவரிடம் இருந்து வாங்கி வந்ததாக ராஜேந்திரன் தொிவித்துள்ளார். இந்த எச்சம் எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது தொடர்பாக, வனத்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
» சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!
» வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்யுங்கள் என எல்&டி தலைவர் பேச்சு - சு.வெங்கடேசன் ஆவேசம்!