17 வயது சிறுவன் வாகனம் ஓட்டி மூதாட்டி மீது விபத்து - திருப்பூரில் தந்தைக்கு சிறை!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: 17 வயது சிறுவன் வாகனம் ஓட்டி மூதாட்டி மீது விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பூர் மாநகர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெயலலிதா நகரில் வசித்து வருபவர் வீராள். இந்த மூதாட்டி, கடந்த ஜன.8-ம் தேதி அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, 17 வயதுடைய சிறுவன் வீரபாண்டியில் இருந்து பழவஞ்சிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தை வேகமாகவும், ஆஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்தபோது, வீராள் மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக வீராள் மகன் அளித்த புகாரின் பேரில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிறுவன் மற்றும் அச்சிறுவனுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதித்த தந்தை ஆறுமுகம் மீது வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சிறுவனின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்த சிறுவனை போலீஸார் எச்சரித்து தாயாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE