கோவை அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கும்பல் கைது

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை அடுத்த சிறுமுகை பகுதியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கும்பலை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் ஓடந்துறை பிரிவு சிராஜ் நகர் பகுதியில் யானை தந்தங்கள் இருப்பதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பணியாளர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக கவுஸ் மைதீன் (47), ரவி (47), வீரன் (47), கிருஷ்ணகுமார் (36), குமார் (45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தலைமறைவாக உள்ள மணிகண்டனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE