சென்னை | 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பெயின்டர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னை​யில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் பெயின்டர் கைது செய்​யப்​பட்​டார். புளியந்​தோப்​பைச் சேர்ந்த பெண் ஒருவர் மகள்​களுடன் வசித்து வருகிறார். சம்பவத்​தன்று அப்பெண் மூத்த மகளுடன் வெளியே சென்​றிருந்​தார்.

13 வயதுடைய இளைய மகள்வீட்டுக்கு வெளியே சக தோழிகளுடன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்போது, பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்​டரான இளையராஜா (49) என்பவர் சிறுமி வீட்​டில் யாரும் இல்லாததை அறிந்து, அவரிடம் நைசாக அழைத்து பேச்​சுக் கொடுத்​தார்.

பின்னர், ஆசை வார்த்தை கூறிதனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை​யில் ஈடுபட்​ட​தாக கூறப்​படுகிறது. அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, தனது தாய் வீடு திரும்​பியதும் நடந்த விபரீதத்தை கண்ணீருடன் தெரி​வித்​தார்.

உடனடியாக இதுகுறித்து புளியந்​தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீஸ் விசா​ரணை​யில் இளையராஜா அத்து​மீறலில் ஈடுபட்டது தெரிந்​தது. இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு சட்டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப்ப​திந்து கைது செய்​தனர். தொடர்ந்து ​விசாரணை நடை​பெற்​று வரு​கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE