போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கும்பல்: தலைவன் டெல்லியில் கைது

By KU BUREAU

சென்னை: ​போதைப் பொருள் கடத்தல் வழக்​கில் தலைமறைவாக இருந்த தென்​னாப்​பிரிக்​காவைச் சேர்ந்த கும்பல் தலைவன் புதுடெல்​லி​யில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல், விற்​பனையை தடுக்க அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள் தலைமை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. தனிப்படை போலீ​ஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்​டுள்​ளனர்.

அதன்படி அரும்​பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்​படை​யினர் கடந்த அக்.20-ம் தேதி அதே பகுதி நடுவங்கரை பாலத்​தின் கீழ் பகுதி​யில் கண்காணித்​தனர். அங்கு மெத்​தம்​பெட்​டமைன் வகை போதைப் பொருளை விற்​பனைக்காக வைத்​திருந்த அம்பத்​தூர் புதூர் பகுதி​யைச் சேர்ந்த அருண் குமார் (28) என்பவரை கைது செய்​தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி கடந்த 31-ம் தேதி மாலை அரும்​பாக்​கம், ரசாக் கார்டன் சாலை​யில் போதைப் பொருள் வைத்​திருந்த வியாசர்​பாடி கணேசன் (51), திரு​வள்​ளூர் மதன் (46), கொடுங்​கையூர் ரவி (48) ஆகிய 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​களிடம் நடத்திய விசா​ரணை​யில், சென்னையைச் சேர்ந்த ராஜா (42), அவரது கூட்​டாளி சத்திய சீலன் (36) ஆகிய மேலும் இருவர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து ஒரு கிலோ 400 கிராம் மெத்​தம்​பெட்​டமைன், 5 துப்​பாக்​கி​கள், 79 தோட்​டாக்​கள், 2 எடை இயந்​திரங்​கள், 2 பேக்​கிங் கருவி​கள், 5 செல்​போன்​கள், சொகுசு கார் பறிமுதல் செய்​யப்​பட்டன.

இந்த வழக்​கில் தென்​னாப்​பிரிக்கா நாட்​டைச் சேர்ந்த ஜான் ஒக்காபர் என்ற கெம்​பாலா (35) தலைமறைவாக இருந்​தார். போதை. கும்பல் தலைவனாக செயல்​பட்ட அவர் புதுடில்​லி​யில் தலைமறைவாக இருப்​பதாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்து, அரும்​பாக்கம் போலீ​ஸார் அங்கு விரைந்து கடந்த 10 நாட்​களாக முகாமிட்டு ஜான் ஒக்காபரை கைது செய்​துள்ளனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து நீதி​மன்றக் காவலில் சிறை​யில் அடைத்​தனர். இந்த போதைப் பொருள் வழக்​கில் இதுவரை 15-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE