விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்த குழந்தை உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயதான குழந்தை லியா லட்சுமி, நேற்று பள்ளி வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே, கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் தந்தை பழனிவேல், இது குறித்து விக்கிரவாண்டி போலீஸில் நேற்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் உள்ளிட்ட 3 பேரையும் இன்று அதிகாலை கைது செய்தனர்.
» காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரியில் பணம் சிக்கியது: அமலாக்கத்துறை சொல்வது என்ன?
» சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு