தாம்பரம் | மாற்று திறனாளி கொலை வழக்கில் 3 பேர் கைது

By KU BUREAU

தாம்பரம்: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியை கொலை செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலையூர், இந்திரா நகரை சேர்ந்த எலக்ட்​ரீஷியன் சூர்யா (21) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்​தினம் மப்பேடு–ஆலப்​பாக்கம் பிரதான சாலை​யில் புத்​தூர் அருகே காலி இடத்​தில் கை கால் கட்டப்​பட்டு கழுத்​தறுக்​கப்​பட்ட நிலை​யில் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

இது தொடர்பாக சேலை​யூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அகரம்​தென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபரி​கணேசன் (25), சேலை​யூர் குட்​டக்​கரையை சேர்ந்த மீன் வியாபாரி ஐயப்பன் (26), குரோம்​பேட்டை கோதண்டம் நகரை சேர்ந்த விஜயபிர​தாப் (23) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

சேலை​யூர் இந்திரா நகர் அருகே உள்ள ‘டாஸ்​மாக்’ கடையில், சூர்யா, சபரி கணேஷ், ஐயப்பன் ஆகியோர் ஆட்டோ​வில் மது அருந்​தி​யுள்​ளனர். இதையடுத்து மூவருக்​கும் இடையே வாக்கு​வாதம் ஏற்பட்​ட​தால் குரோம்​பேட்​டை​யில் உள்ள விஜயபிர​தாப் வீட்டுக்கு சென்​றுள்​ளனர். அங்கு 4 பேரும் சேர்ந்து மீண்​டும் மது அருந்திய போது தகராறு ஏற்பட்​டுள்​ளது.

இதில், ஆத்திரமடைந்த சபரி கணேசன் வீட்​டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து சூர்​யாவை அடித்​ததோடு கத்தி​யால் கழுத்தை அறுத்​துள்ளார். தொடர்ந்து ஐயப்​பனும் கழுத்தை அறுத்​துள்ளார். விஜயபிர​தாப் குழவி கல்லால் தாக்கி​யுள்​ளார்.

இதில் சூர்யா ரத்த வெள்​ளத்​தில் சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​துள்ளார். செய்​வதறியாத நிலை​மை​யில் இருந்த மூன்று பேரும் ரத்த வெள்​ளத்​தில் இருந்த சூர்யா உடலை வீட்​டில் இருந்த துணி மற்றும் பிளாஸ்​டிக் கவர்​களால் கட்டி மப்பேடு ஆலப்​பாக்​கம் பகு​தி​யில் புதர் என்று நினைத்து சாலை​யோரம் வீசி​விட்டு சென்றது ​விசா​ரணை​யில்​ தெரியவந்​தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE