கல்பாக்கம்: புத்தாண்டு கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த சென்னையைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன்கள் நிதிஷ்(15), திவாஷ்(14). இவர்கள் இருவரும், புத்தாண்டை கொண்டாடுவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். மேலும், புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) நகரியப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இருவரும் நீரில் முழ்கியுள்ளனர்.
தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸார், விரைந்து வந்து மீனவர்களின் துணையோடு கடலில் மாயமான சிறுவர்களை தேடினர். இதில், இருவரையும் மீட்டு அருகில் உள்ள அணுசக்தி துறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள கடலில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். இதனால், அங்கு வந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
» தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சி: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!