குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை - ராமநாதபுரத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த இஸ்மத் இன்னூன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தனித்தனியான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இஸ்மத் இன்னூன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் பரிந்துரையின் கீழ் 2 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE