உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - ராமேஸ்வரத்தில் மேலும் ஒருவர் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரைக்கு எதிரே இருந்த லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அங்கு அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்து ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்து, அங்கிருந்த ரகசிய காமிராவை பறிமுதல் செய்து, லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராஜேஷ் கண்ணன் என்பவரை கைது செய்திருந்தனர்.

மேலும், ராஜேஷ் கண்ணா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அங்கு டீ மாஸ்டராக பணிபுரிந்த ராமேசுவரம் ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் (37) என்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE