ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் உரிமையாளரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பக்தர் ஒருவர், கடற்கரையிலிருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். அறையின் மறைவான இடத்தில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், இதுகுறித்து அருகிலிருந்த ராமேசுவரம் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அக்னிதீர்த்தக் கடற்கரையிலிருந்த அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்ததில் அங்கு ரகசிய காமிரா பொருத்தியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் ரகசிய கேமிராவை அகற்றி லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராமேசுவரம் தம்பியான் கொல்லையையை சேர்ந்த நடராஜன் என்பவர் மகன் ராஜேஷ் கண்ணன் (34) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
» மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: மனம் திறந்த தேவா!
» விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: இபிஎஸ்க்கு தேமுதிக சார்பில் நேரில் அழைப்பு!