சென்னை: மடிப்பாக்கத்தில் போதைப் பொருள் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மடிப்பாக்கம் மூவரசன்பேட்டை ஏரிக்கரை சாலை அருகே நேற்று முன்தினம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை செய்ததில் அவர் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்
கைது செய்யப்பட்டவர் திரிசூலத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பது தெரியவந்தது. அவரிடம் 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 எடை மெஷின் மற்றும் 1 ஆப்பிள் ஐ-போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான இருவரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.