தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே மீன்பாசி குத்தகைதாரர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி கருத்தப்பிள்ளையூரை சேர்ந்தவர் இருதயராஜ் (45). அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதனால் நேற்று இரவு குளத்துக்கு காவலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்கே தலை துண்டித்த நிலையில் இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆழ்வார்குறிச்சி போலீஸார், உடலையும், துண்டிக்கப்பட்ட தலையையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த இருதயராஜின் தந்தைக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகனான இருதயராஜுக்கும், இரண்டாம் மனைவியின் மகன்களான ஜெயபால் மற்றும் ஆரோக்கியசாமிக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. சொத்து பிரச்சினை காரணமாக இருதயராஜ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
» காணாமல் போன பிளஸ் 1 மாணவி: இரு இளைஞர்களுடன் குளத்தில் சடலமாக மீட்பு - உடுமலையில் அதிர்ச்சி
» வேலூர் பாஜக நிர்வாகி கொலை: திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கைது