காணாமல் போன பிளஸ் 1 மாணவி: இரு இளைஞர்களுடன் குளத்தில் சடலமாக மீட்பு - உடுமலையில் அதிர்ச்சி

By KU BUREAU

திருப்பூர்: உடுமலை அருகே சாலையோர குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிளஸ் 1 மாணவி மற்றும் 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜின் மகள் தர்ஷனா (16) தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். தர்ஷனாவும், சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் ஆகாஷும் (19) இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இந்த விசயம் மாணவியின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது.

கடந்த 18 ம் தர்ஷனாவுக்கு பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்க ஆகாஷ் நேரில் வந்துள்ளார். அப்போது மாணவியின் உறவினர் மாரிமுத்து (20) உள்ளிட்ட இவர்கள் மூவரும் மானுப்பட்டி - எலையமுத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

வீட்டை விட்டு சென்ற அவர்கள் 3 பேரும் வீடு திரும்பாததால், தர்ஷனாவின் பெற்றோர் அன்றே தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குறிச்சிகோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

விசாரணையில் அவை மேற்படி மூவரின் சடலங்கள் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது . பின்னர் தீயணைப்பு துறை உதவியுடன் சடலங்கள் மீடக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அமராவதி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஒரே பைக்கில் 3 பேர் சென்றபோது குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்ற தெரிய வருவதாக போலீசார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE