சேரன்மகாதேவி அருகே சட்டக் கல்லூரி மாணவர் கொலை: முன்விரோதத்தால் பயங்கரம்

By KU BUREAU

திருநெல்வேலி:சேரன்மகாதேவி அருகே சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(22) சென்னையிலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்குமுன் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீஸார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சேரன்மகாதேவியை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் சேரன்மகாதேவியில் பதற்றம் நீடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE