சென்னை | மெத்​தம்​பெட்​டமைன் போதைப்பொருள் விற்பனை: கேரள இளைஞர்கள் இருவர் சென்னை​யில் கைது

By KU BUREAU

சென்னை: மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் விற்​பனை​யில் ஈடுபட்​ட​தாக, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சென்னை​யில் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை​யில் போதைப் பொருள் விற்​பனை, கடத்​தல், பதுக்கலை தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்​துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளது. தனிப்படை போலீ​ஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்​டுள்​ளனர். அதன்​படி, சைதாப்​பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீ​ஸார் நேற்று முன்​தினம் மதியம் சிஐடி நகர், 5-வது மெயின் சாலையில் கண்காணிப்பு பணியி​ல் ஈடுபட்டிருந்​தனர். அப்போது அங்கு நின்று கொண்​டிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசா​ரித்​தனர். அப்போது அவர்கள் முன்னுக்​குப்​பின் முரணாக பதில் கூறினர்.

சந்தேகத்​தின் பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்​தம்​பெட்​டமைன் போதைப் பொருள் வைத்​திருந்தது தெரிய​வந்​தது. அதை பறிமுதல் செய்த போலீ​ஸார், போதைப் பொருளை விற்​பனைக்காக வைத்​திருந்த கேரள மாநிலம், கண்ணூர் பகுதி​யைச் சேர்ந்த ரமீஸ் (25), அவரது கூட்​டாளி அதே மாநிலத்​தைச் சேர்ந்த ஈசாக்கு (28) ஆகிய இருவரை கைது செய்​தனர். விசா​ரணைக்கு பின்னர் இருவரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE