கரூர்: மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரம் இரட்டை வாய்க்கால் பகுதியில் திங்கட்கிழமை (டிச. 17) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதனை மதியம் 1.30 மணியளவில் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.
சடலத்தின் இரு கைகளிலும் சிங்கம் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதனை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் அரவக்குறிச்சி அருகேயுள்ள இனுங்கனூரை சேர்ந்த காளிதாஸ் (32) என்பவராக இ ருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இவர் மீது பல்வேறு திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகள் உள்ளதாகவும் ரவுடி பட்டியலில் அவர் பெயர் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறையில் இருந்த காளிதாஸிற்கு மகாதானபுர த்தை சேர்ந்த கைதிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை சந்திக்க காளிதாஸ் மகாதானபுரம் வந்து சென்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களை சந்திக்க காளிதாஸ் வந்ததாகவும் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொல் லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து கொல்லப்பட்டவரின் தலையையும், குற்றவாளிகளையும், போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் காளிதாஸ் அடிக்கடி ராமநாதபுரம் சென்று வருவார் என கூறப்படுகிறது அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டவரின் தலை கிடைத்த பின்பே கொல்லப்பட்டவர்கள யாரென உறுதியாக கூறமுடியும் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் குற்றப்பிரிவு குழுவினர் (க்ரைம் டீம்) இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.