சென்னை | ரயிலில் கேட்​பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

By KU BUREAU

சென்னை: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரயில்வே போலீ​ஸார் நேற்று காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்​டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் காக்​கிநாடா​வில் இருந்து எழும்​பூர் வழியாக புதுச்​சேரிக்கு இயக்​கப்​படும் சர்க்​கார் விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் பயணிகள் இறங்​கிச் சென்ற பிறகு, சோதனை நடத்​தி​ய​ போது, ரயிலின் பொதுப் பெட்டி​யில் ஒருபை கேட்​பாரற்று கிடந்தது.

அந்த பையை திறந்து பார்த்த​போது, அதில் ரூ.1.20 லட்சம் மதிப்பு கொண்ட 6 கிலோ கஞ்சா பொட்​டலங்கள் இருந்தன. அந்த கஞ்சா பொட்​டலங்களை ரயில்வே போலீ​ஸார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் விஜய​வாடா​வில் இருந்து கஞ்சாவையாராவது கடத்தி வந்து இருக்​கலாம், போலீ​ஸாரை கண்டதும் பையை வைத்து​விட்டு தப்பி​யிருக்​கலாம் என்றும் போலீ​ஸார் சந்தேகிக்​கின்​றனர். இது தொடர்பாக வழக்​குப்​ப​திந்து ​விசா​ரித்து வரு​கின்​றனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE