லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: 10 பேர் படுகாயம்

By KU BUREAU

சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து அவிநாசி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று அதிகாலை சொகுசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து, அவிநாசி புறவழிச்சாலை புதுப்பாளையம் பிரிவு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் அவிநாசி அரசு மருத்துவமனை, திருப்பூர், கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீஸார்ம் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE