கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி ஜெயப் பிரியா (26). இவர். தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பாலமுருகன் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பெண் காவலர் ஜெயப்பிரியாவுக்கு விருத்தாசலம் அருகே உள்ள கொக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசிஅணியின் மாவட்ட செயலாளரான விஜயகுமார் (40) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒரு வழக்கு தொடர்பாக ஜெயப்பிரியா பணிபுரிந்து வந்த காவல் நிலையத்துக்கு சென்ற விஜயகுமார் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இதுகுறித்து ஜெயப்பிரியா காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தார்.