சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசிரியர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி: சென்னையில் டிராவல்ஸ் உரிமையாளர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களை பஞ்சாப், காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதி​களுக்கு குறைந்த கட்ட​ணத்​தில் இன்ப சுற்றுலா அழைத்​து செல்​வதாக டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வரும் ஆழ்வார்​பேட்டை, கஸ்தூரி ரங்கன் சாலை பகுதியில் வசிக்​கும் பாலாஜி (48) என்பவர் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

இதை உண்மை என நம்பிய ஆசிரியர்கள் பலர் ஒன்றிணைந்து 3 தவணை​களாக சுமார் ரூ.19 லட்சம் கொடுத்​துள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றுலா அழைத்​துச் செல்​வதாக திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது. ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட பாலாஜி, சுற்றுலா அழைத்​துச் செல்​லாமல் காலம் தாழ்த்தி உள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சம்பந்​தப்​பட்ட தனியார் பள்ளி முதல்வர் இதுகுறித்து எழும்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இது தொடர்பாக போலீஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் என 50 பேரை 7 நாள் சுற்றுலா அழைத்​துச் செல்​வதாக பண மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து பண மோசடி​யில் ஈடுபட்​டதாக பாலாஜியை ​போலீ​ஸார் நேற்று ​முன்​தினம் கைது செய்​தனர், மேலும், இதுபற்றி தொடர்ந்து ​விசாரணை நடை​பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE